புதன், 8 நவம்பர், 2023

பீஷ்மர் பாண்டவர்களுக்கு உரைக்கும் மகாபாரத பொது நீதி

 பீஷ்மர் பாண்டவர்களுக்கு அளிக்கும் போர்பயிற்சியின் போது, ஒருநாள் துரியோதனனையும் தர்மரையும் கடைத்தெருவுக்குச் சென்று வர சொல்லுகிறார். இருவரும் ஒன்றாக சென்று திரும்பி வருகின்றனர். 

பீஷ்மரோ முதலில் துரியோதனனிடம் "நீ கடைத்தெருவில் என்ன பார்த்தாய்?" என்று கேட்கின்றார்.

துரியோதனனோ, " அங்கே ஒரு இறைச்சி கடையைக் கண்டேன், அவன் உயிர்களை கொன்று கொண்டிருக்கிறான்" என்று உரைத்தான்.

பீஷ்மரோ அதே கேள்வியினை தர்மரிடம் கேட்கின்றார்.

தர்மரோ, "அங்கே இறைச்சி கடையைக் கண்டேன், இறைச்சி வெட்டுபவன் தான் வெட்டிய இறைச்சிகளில் சிலவற்றை காகங்களுக்கு உணவிட்டான்" என்று உரைத்தார்.

பீஷ்மரோ தன் நீதியைக் கூறுகின்றார். " யாருக்கு எத்தகைய எண்ணங்கள் பெரியதாக இருக்கின்றதோ, அவர்கள் காணுகின்ற காட்சிகளிலும் அத்தகைய எண்ணங்களே பிரதிபலிக்கும், துரியோதனனுக்கோ எதிரியை அழிக்க வேண்டும், கொல்ல வேண்டும் என்கின்ற எண்ணமே மேலோங்கி இருந்ததால் அவன் அதனையே கூறினான். தர்மனுக்கோ தர்ம சிந்தனை மேலோங்கி இருந்ததால், அவன் தானமிட்டதனை கண்டதாக கூறினான். இதனின்று எல்லோரும் உணரக்கூடிய உண்மை யாதெனில் நாம் என்ன எண்ணுகின்றோமோ அவையே நாம் காண்பவற்றுள்ளும் புலப்படும், ஆகையால் நல்லதே நினைப்போம், நல்லதே சொல்லுவோம், நல்லதே செய்வோம், இதுவே உலக நீதி" 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக