வியாழன், 10 பிப்ரவரி, 2022

"அண்ணே ஒரு டீ "


அசோக் என் பெயர். நான் உங்களைப்போல ஒரு சாதாரண மனிதன். எனக்கு எப்பொழுதும் தூங்கி எழுகையில் தேநீர் (tea) குடிப்பது வழக்கம். அவ்வாறு இந்த சென்னையில் நிறைய இடங்களில் தேநீர் அருந்தியிருக்கிறேன். என்றும் போல் இன்றும் தேநீர் அருந்த செல்கையில் புதியதாக ஒரு தேநீர் கடை கண்ணில் பட்டது. இரண்டொரு நாள் முன்பு எனது நபர் கூட கூறினார் இங்கு தேநீர் அருந்துங்கள் நன்றாக இருக்கும் என, ஆகையால் சரி என்று சென்றேன். அதன் பெயர் கருப்பட்டி காபி கடை. கடைக்கு சென்றேன்,

"அண்ணே ஒரு டீ "
"ஓகே சார் உட்காருங்க" 

நான் அங்கிருக்கும் டேபிளில் சென்று அமர்கிறேன், சில வினாடிகள் ஆகிறது. டீ வர தாமதமாகுமோ என்றெண்ணி மீண்டும் நான் டீ மாஸ்டர் அருகில் சென்றேன்.

மீண்டும் கணக்காளர் 
"சார் உட்காருங்க ஒரு நிமிடம்"

நான் மீண்டும் டேபிளில் சென்று அமர்கிறேன்.

அருகில் இன்னுமொரு டேபிளில் ஒரு கருப்பான தடித்த மனிதர் கதராடையுடன் அமர்ந்திருக்கிறார். அவர் 

"என்னப்பா தம்பிக்கு ஒரு டீ கொடுங்க... தம்பி நீங்க உட்காருங்க"

அவர் தான் காபி கடை முதலாளி என்று கருதுகிறேன்.

சில நொடிகளில் டீ எனது டேபிளுக்கு வந்தது. அங்கு வேலைக்கு இருக்கும் பையன் மூலமாக.. நான் டீயை குடித்தேன் ரசித்தபடி.. என் மனதில் ஒரு யோசனை ஓடிக்கொண்டே இருக்கிறது...
அந்த காப்பிக்கடை முதலாளியை பற்றி.. அவர் அநேகமாக திருநெல்வேலி பகுதியாக இருக்கலாம்..அங்கே நின்ற வேலைக்கு வந்திருந்த இளைஞர்கள் "அண்ணாச்சி கெளம்புறேன்" என்று சொல்லி சென்றார்கள்.

கருத்து - ஒரு தொழில் சிறக்க அதன் சிறப்பு தன்மையுடன், அதற்குரிய உபசரிப்பு பண்புகளும் வேண்டும், ஏனெனில் அப்பொழுதுதான் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க முடியும். இது தொழிலின் நேர்த்தி. உண்மையில் வாடிக்கையாளர்களை உபசரிப்பதில் பாதி வியாபாரம் நிறைவாகிறது. பொருளின் தரமும் சிறப்பாக இருக்க வேண்டும்.