புதன், 8 நவம்பர், 2023

பீஷ்மர் பாண்டவர்களுக்கு உரைக்கும் மகாபாரத பொது நீதி

 பீஷ்மர் பாண்டவர்களுக்கு அளிக்கும் போர்பயிற்சியின் போது, ஒருநாள் துரியோதனனையும் தர்மரையும் கடைத்தெருவுக்குச் சென்று வர சொல்லுகிறார். இருவரும் ஒன்றாக சென்று திரும்பி வருகின்றனர். 

பீஷ்மரோ முதலில் துரியோதனனிடம் "நீ கடைத்தெருவில் என்ன பார்த்தாய்?" என்று கேட்கின்றார்.

துரியோதனனோ, " அங்கே ஒரு இறைச்சி கடையைக் கண்டேன், அவன் உயிர்களை கொன்று கொண்டிருக்கிறான்" என்று உரைத்தான்.

பீஷ்மரோ அதே கேள்வியினை தர்மரிடம் கேட்கின்றார்.

தர்மரோ, "அங்கே இறைச்சி கடையைக் கண்டேன், இறைச்சி வெட்டுபவன் தான் வெட்டிய இறைச்சிகளில் சிலவற்றை காகங்களுக்கு உணவிட்டான்" என்று உரைத்தார்.

பீஷ்மரோ தன் நீதியைக் கூறுகின்றார். " யாருக்கு எத்தகைய எண்ணங்கள் பெரியதாக இருக்கின்றதோ, அவர்கள் காணுகின்ற காட்சிகளிலும் அத்தகைய எண்ணங்களே பிரதிபலிக்கும், துரியோதனனுக்கோ எதிரியை அழிக்க வேண்டும், கொல்ல வேண்டும் என்கின்ற எண்ணமே மேலோங்கி இருந்ததால் அவன் அதனையே கூறினான். தர்மனுக்கோ தர்ம சிந்தனை மேலோங்கி இருந்ததால், அவன் தானமிட்டதனை கண்டதாக கூறினான். இதனின்று எல்லோரும் உணரக்கூடிய உண்மை யாதெனில் நாம் என்ன எண்ணுகின்றோமோ அவையே நாம் காண்பவற்றுள்ளும் புலப்படும், ஆகையால் நல்லதே நினைப்போம், நல்லதே சொல்லுவோம், நல்லதே செய்வோம், இதுவே உலக நீதி" 

புதன், 18 அக்டோபர், 2023

சிவசங்கரன் சிறிய வயதில் பெரிய மனம் கொண்டவன்

                 சிவசங்கரன் ஐந்தாம் வகுப்பு படிக்கின்றான். அவன் பகுதி நேரமாக ஹிந்தி மொழி கற்று வருகின்றான். இன்று ஆகஸ்ட் 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அவனுக்கு ஹிந்தி பாடத்தில் இரண்டாம் நிலைக்கு பொதுத்தேர்வு வைத்திருக்கின்றனர். காலையிலேயே தன் சகதோழனுடன் அவன் தந்தைகூட இருசக்கர வாகனத்தில் தேர்வு நடைபெறும் பள்ளியை வந்தடைந்தான். அங்கே அவன் தன் மாமா, மாமி, மற்றும் சிவபாலனையும் பார்க்கின்றான். இன்று சிவபாலனுக்கும் தேர்வு. இருவரையும் தேர்வு எழுதும் கூடத்தில் அவனது மாமாவும் மாமியும் தேர்வு தொடங்கும் முன்னர் அவர்கள் இருக்கையில் அமரவைத்துவிட்டு சென்றனர். இருவரும் ஹிந்தி தேர்வு நன்றாக எழுதினார்கள். தேர்வு முடிந்து மதியம் உணவு இடைவேளை விடப்பட்டது.

          அங்கே அவனது மாமாவும், மாமியும் இருவருக்கும் உணவுப்பொட்டலமும் சில உளுந்து வடைகளும் வாங்கி வந்திருந்தனர். சிவபாலன் தன் நண்பர்கள், தோழிகளை கண்டவுடன் அவர்களுடன் கலந்துரையாடினான். அவனது நண்பர்களும், தோழிகளும் சிவபாலனுடன் சேர்ந்து உணவு உட்கொள்ள அழைத்தனர். சிவபாலன் தன் தாயுடன் நண்பர்களுடனும் உணவு உட்கொள்ள அமர்ந்தான், அவன் தாய் சிவபாலனுக்கான உணவையும் சில வடைகளையும் அவனிடம் கொடுத்தார். அவன் தன் தாய் தனக்களித்த உளுந்து வடைகளை தன் நண்பர்களுக்கு ஆளுக்கு ஒன்றாக கொடுத்தான். அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவு உட்கொண்டனர். 

      அவன் தந்தை சிவசங்கரனுக்கு வாங்கி வைத்திருந்த உணவு பொட்டலத்தினையும் மீதமிருந்த ஒர் வடையையும் எடுத்துக்கொண்டு சிவசங்கரனிடம் சென்றார். அங்கே சிவசங்கரன் தன் நண்பர்களுடன், தோழிகளுடன் உணவு உட்கொள்ள ஒன்றாக அமர்ந்திருந்தான். அவன் மாமா அவனுக்கு வாங்கிய உணவு பொட்டலத்தையும் ஒரு வடையையும் அவனிடம் அன்புடன் கொடுத்தார். அதனை ஆவலாக வாங்கிய சிவசங்கரன் தன் தாய் தனக்களித்த மதிய உணவினை சாப்பிடாமல் வைத்துவிட்டு, தன் தாய்மாமா பாசமாக வழங்கிய உணவுப் பொட்டலத்தினை பிரித்து உண்ணத்தொடங்கினான். தன் மாமா கொடுத்த ஓர் வடையினை தன்னை சுற்றி அமர்ந்து உணவு உட்கொண்ட நண்பர்கள் ஆறு பேருக்கும் பிரித்து பகிர்ந்து கொடுத்து உணவு உட்கொண்டான். அனைவரும் உணவு உட்கொண்ட பின்னர் அவனுடைய தோழி ஒருவர் மட்டும் தன் மதிய உணவுக்காக தன் பெற்றோரைப் பார்த்து காத்திருந்தாள். அவன் சிவசங்கரன் மாமாவிடம் தொலைபேசி வாங்கி தன் தந்தைக்கு போன் செய்தாள். தந்தையிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனை கவனித்த சிவசங்கரன் "அக்கா என்னுடைய மதிய உணவினை சாப்பிடுங்கள்" என்று தன் தாய் தனக்கு அளித்த உணவினை தன் சகதோழிக்கு அன்புடன் வழங்கினான். அவள் அதனை ஆவலுடன் பெற்றுக்கொண்டு உட்கார்ந்து உணவு உண்டாள். பின்னர் அனைவரும் ஒருமுறை பாடத்தினை படித்துவிட்டு மீண்டும் மதிய நேர 

               தேர்வுக்கு சென்றனர். அனைவரும் தேர்வினை நான்றாக எழுதிவிட்டு மாலை வீடு சென்றனர். சிவசங்கரனும் சிவபாலனும் தம்தம் வீடுகளுக்கு சென்றனர். இச்செயல் உணர்த்தும் நீதி யாதெனில் சிவசங்கரன் தனக்கு கிடைத்த ஓர் உளுந்து வடையினையும் தன் நண்பர்கள் ஆறு பேருக்கும் பகிர்ந்தளித்து உண்டான். 

குறள் உணர்த்தும் நீதி: 

அதிகாரம் 07 - மக்கட்பேறு - திருக்குறள் 62 

எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் 

பண்புடை மக்கள் பெறின். 

பொருள்: பிறரால் பழிக்கப்படாத நற்குணம் நிறைந்த மக்களைப் பெற்றால், அந்தப் பெற்றோரை ஏழு பிறவியிலும் துன்பங்கள் சேராது.

அதிகாரம் 33 - கொல்லாமை  - திருக்குறள் 322

பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புதல் நூலோர் 

தொகுத்தவற்றுள் எல்லாம் தலை.

பொருள்:  கிடைத்ததைப் பகுத்துக் கொடுத்துப் பல உயிர்களைக் காப்பாற்றி வருதல் நூலோர் தொகுத்துக் கூறிய அறங்களிலெல்லாம் சிறந்ததாகும். 

செவ்வாய், 1 நவம்பர், 2022

சிவபாலன் ஒரு சிறந்த சிறிய வயது மேதை - Sivapalan is a great little genius


சிவபாலன் என்ற பிரகாசமான பையன் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். விடுமுறையில் ஒருமுறை, அவரது தாயாருக்கு பட்டாசு புகையால் கண் பிரச்சனை ஏற்பட்டது. அவரது கணவர் மருந்தகத்தில் தனது மனைவிக்கு கண் சொட்டு மருந்துகளை வாங்குகிறார். கண் சொட்டு பாட்டிலைத் திறந்ததும், கண்களில் சொட்டு மருந்துகளை ஊற்றினாள். சிறிது நேரம் கழித்து சிவபாலன் அவள் கண்ணிமையில் இருந்த சிறிய வெள்ளை மைக்ரோகேப்பை பார்த்தான். அதை எடுக்க அல்லது அகற்ற முயற்சிக்கவும். அதை எடுக்க முடியவில்லை. ஆனால், கணவர் முயற்சி செய்தும் எடுக்கவில்லை. இது கண் சாக்கெட்டுக்குள் நகரும் முன் கண்ணின் உள் விளிம்பிற்கு நகர்ந்தது. அவரது கணவர் விரைவில் அந்தப் பகுதியில் உள்ள புகழ்பெற்ற கண் நிபுணரைப் பார்க்க ஏற்பாடு செய்தார். பரிசோதனைக்குப் பிறகு, மருத்துவர் எதுவும் சொல்லவில்லை. மருந்தின் விளக்கத்தை எழுதி அவளிடம் கொடுக்கிறார். இரண்டு நாட்களுக்கு போதுமான மாத்திரைகள் மற்றும் கண் சொட்டு மருந்துகளுடன் அவள் மருத்துவமனையை விட்டு வெளியேறினாள். இரண்டாவது நாள் இரவு சிவபாலன் தன் தாய்க்கு கண் சொட்டு மருந்து கொடுக்க முயற்சிக்கிறான். என் கண் வேதனையில் உள்ளது, போராடுகிறது என்றாள். சிவபாலன் தன் தாயாருக்கு சில அறிவுரைகளை கூறிவிட்டு கண்களை மசாஜ் செய்ய முயன்றான். அவன் அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான். கண்ணிமையில் இருந்து இறங்கிய வெள்ளை நிற பிளாஸ்டிக் பாட்டில் கண்மணியை அடைந்தது. பக்கத்து வீட்டு அத்தைக்கு போன் செய்து அவள் உதவியோடு அம்மாவின் கண்ணில் இருந்த வெள்ளை நிற பிளாஸ்டிக் பாட்டிலை அகற்ற முயற்சிக்கிறான். பக்கத்து வீட்டுக்காரர் சிவபாலனின் தாயாருக்குச் சொந்தமான வெள்ளைக் கண்துளி பாட்டில் தடையை மெதுவாக அகற்றினார். ஒரு சிறு குழந்தை பிரச்சனைகளை எப்படி அணுகுகிறது மற்றும் பணிகளை முடிப்பதில் சிறந்து விளங்கும் சிவபாலன் ஒரு சிறந்த சிறிய மேதை. வாழ்த்துக்கள் சிவபாலன்.

வியாழன், 10 பிப்ரவரி, 2022

"அண்ணே ஒரு டீ "


அசோக் என் பெயர். நான் உங்களைப்போல ஒரு சாதாரண மனிதன். எனக்கு எப்பொழுதும் தூங்கி எழுகையில் தேநீர் (tea) குடிப்பது வழக்கம். அவ்வாறு இந்த சென்னையில் நிறைய இடங்களில் தேநீர் அருந்தியிருக்கிறேன். என்றும் போல் இன்றும் தேநீர் அருந்த செல்கையில் புதியதாக ஒரு தேநீர் கடை கண்ணில் பட்டது. இரண்டொரு நாள் முன்பு எனது நபர் கூட கூறினார் இங்கு தேநீர் அருந்துங்கள் நன்றாக இருக்கும் என, ஆகையால் சரி என்று சென்றேன். அதன் பெயர் கருப்பட்டி காபி கடை. கடைக்கு சென்றேன்,

"அண்ணே ஒரு டீ "
"ஓகே சார் உட்காருங்க" 

நான் அங்கிருக்கும் டேபிளில் சென்று அமர்கிறேன், சில வினாடிகள் ஆகிறது. டீ வர தாமதமாகுமோ என்றெண்ணி மீண்டும் நான் டீ மாஸ்டர் அருகில் சென்றேன்.

மீண்டும் கணக்காளர் 
"சார் உட்காருங்க ஒரு நிமிடம்"

நான் மீண்டும் டேபிளில் சென்று அமர்கிறேன்.

அருகில் இன்னுமொரு டேபிளில் ஒரு கருப்பான தடித்த மனிதர் கதராடையுடன் அமர்ந்திருக்கிறார். அவர் 

"என்னப்பா தம்பிக்கு ஒரு டீ கொடுங்க... தம்பி நீங்க உட்காருங்க"

அவர் தான் காபி கடை முதலாளி என்று கருதுகிறேன்.

சில நொடிகளில் டீ எனது டேபிளுக்கு வந்தது. அங்கு வேலைக்கு இருக்கும் பையன் மூலமாக.. நான் டீயை குடித்தேன் ரசித்தபடி.. என் மனதில் ஒரு யோசனை ஓடிக்கொண்டே இருக்கிறது...
அந்த காப்பிக்கடை முதலாளியை பற்றி.. அவர் அநேகமாக திருநெல்வேலி பகுதியாக இருக்கலாம்..அங்கே நின்ற வேலைக்கு வந்திருந்த இளைஞர்கள் "அண்ணாச்சி கெளம்புறேன்" என்று சொல்லி சென்றார்கள்.

கருத்து - ஒரு தொழில் சிறக்க அதன் சிறப்பு தன்மையுடன், அதற்குரிய உபசரிப்பு பண்புகளும் வேண்டும், ஏனெனில் அப்பொழுதுதான் வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்க முடியும். இது தொழிலின் நேர்த்தி. உண்மையில் வாடிக்கையாளர்களை உபசரிப்பதில் பாதி வியாபாரம் நிறைவாகிறது. பொருளின் தரமும் சிறப்பாக இருக்க வேண்டும்.